interactional problems

தொடர்பாடல் பிரச்சனைகள்

தமிழ் விளக்கம்

தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் செய்த அல்லது செய்யத் தவறிய செயல்களின் விளைவாக மற்றவர்களுடன் தொடர்பாடுவதில் சந்திக்கும் பல பிரச்சனைகளை, தொடர்பாடல் பிரச்சனைகள் என்ற சொல்லால் குறிக்கின்றனர். சமூகப்பணியின் அணுகுமுறையான சூழலுக்குட்பட்ட மனிதன் (Person in Environment (PIE) System) கருத்தாக்கம் இந்த தொடர்பாடல் பிரச்சனையின் ஒன்பது பரிமானங்களை (nine types of interactional difficulties) விளக்குகிறது. அவையாவன அதிகாரத் தொடர்பாடல் (power type), இருமுகத் தொடர்பாடல் (ambivalence type), பொறுப்பான தொடர்பாடல் (responsibility type), பிறரைச் சார்ந்திருக்கும் தொடர்பாடல் (dependency type), பயனற்ற, நசிந்த தொடர்பாடல் (loss type), தொடர்பாடலின்மை (isolation type), துயருக்குள்ளாக்கும் தொடர்பாடல் (victimization type), இவை எல்லாமும் கலந்த தொடர்பாடல் (mixed). இந்தத் தொடர்பாடல் பிரச்சனைகளை அதன் தீவிரத் தன்மை, அதன் காலஅளவு மற்றும் சமாளிக்கும் திறன் போன்றவற்றைப் புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வை சமூகப்பணியாளர்கள் கையாளுகிறார்கள்.

English

A term used by social workers as a category for the difficulties clients are having in their relationships with others as a consequence of some acts of commission or omission. In the PersoninEnvironment (PIE) System, nine types of interactional difficulties are indicated: power type, ambivalence type, responsibility type, dependency type, loss type, isolation type, victimization type, mixed, and other.