interest group
ஆர்வக்குழுக்கள், நலன் நாடும் குழுக்கள்
தமிழ் விளக்கம்
தங்களுக்குச் சாதகமான ஒன்றைப் பெறவோ, பொதுநலன் கருதியோ வெளிப்படைத்தன்மை கொண்டு, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயல்படும் தன்னார்வ அமைப்புகளை ஆர்வக்குழுக்கள் எனலாம். இந்த அமைப்பு விதிமுறை சார்ந்த அமைப்பாகவோ (formal), விதிமுறை சாராத அமைப்பாகவோ (informal) செயல்படலாம். ஆர்வக்குழுக்கள் என்பது வணிக நிறுவனங்கள் (corporations), தொண்டு நிறுவனங்கள் (charitable organizations), மனித உரிமைக்குழுக்கள், குடியிருப்புக் குழுக்கள் (neighborhood associations), தொழிற்சங்கங்கள் (trade unions), தொழில்சார் குழுக்கள் (professional groups) என்று பொதுவான நோக்கினடிப்படையில், கூட்டாகச் செயல்படும் தன்மையைக் குறிக்கும் பொதுச் சொல்.
English
A segment of the population or members of a formal or informal association who have common interests, goals, concerns, or desires that often lead to purposeful and united action; also known as a special-interest group. See also constituency.