Interest inventory
ஆர்வப் பட்டியல்
தமிழ் விளக்கம்
ஒரு செயலைச் செய்ய மனிதர்களிடமிருக்கும் முனைப்புத் தன்மையை அளவிட உதவும் சுயமதிப்பீட்டு கேள்வித்தாள். இந்த வகையான சோதனைகள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற வருபவர்களின் தொழில்சார் ஆர்வத்தை அறியப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சோதனை முறை 1927 ஆம் ஆண்டு, எட்வர்ட் கெல்லோக் ஸ்ட்ராங்க் (Edward Kellog Strong) எனும் உளவியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்டதால், இது SII (Strong Interest Inventory) எனப்படுகிறது. பின்னர் 2004 இல் ஜான் ஹாலண்ட் என்பவரால் தரப்படுத்தப்பட்டது. ஆளுமை வகைப்பாட்டின் அடிப்படையில் ஆறு வகையான தொழில்சார் ஆர்வத்தை அறிய ஹாலனின் குறியீடுகள் உதவுகின்றன. எதார்த்தவாதிகள் (realistic), காரியமாற்றுபவர்கள் (doers), புலனாய்வுத் திறனுள்ளவர்கள் (shamans - Investigative), சிந்திப்பவர்கள் Thinkers), கலை உணர்வாளர்கள் (Artistic), படைப்பாளர்கள் (Creators), தோழமை உணர்வு கொண்டவர்கள் (healers - Social), உதவி புரிபவர்கள் (Helpers), ஊக்கெழுச்சியுடையவர்கள் (leaders - enterprising), ஒப்பப்பண்ணுபவர்கள் (persuaders), மரபொழுங்கு சார்ந்தவர்கள் (lorekeepers - Conventional), அமைப்பாளர்கள் (Organizers) என்று ஆர்வங்களை ஆறு ஆளுமைக்குணங்களாக அறுகோண வடிவில் வகைப்படுத்தினார்.
English
A form of questionnaire designed to measure the degree to which one is motivated for a particular activity. Such tests are widely used in vocational guidance.