interferon

இன்டர்ஃபெரான்

தமிழ் விளக்கம்

இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள், பிளாஸ்மா ஆகிய நான்கு முக்கியப் பாகங்களிலிருந்து சிறு கூறுகள் எடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற புரதப்பொருள் உள்ளது. மனிதர்களுடைய அல்லது மிருகங்களுடைய ஹீமோகுளோபினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், கடும் இரத்தசோகைக்கு அல்லது பெரும் இரத்த இழப்புக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெள்ளை அணுக்களிலிருந்து இன்டர்ஃபெரான், இன்டர்லூகின் போன்றவை பெறப்படுகின்றன. சில வைரஸ் தொற்றுகளுக்கும், புற்றுநோய்களுக்கும் சிகிச்சையளிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. இது தற்போது சோதனைச் சாலைகளிலே செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. இன்டர்ஃபெரான் தற்போது எச்.ஐ.வி அல்லது மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மத்தை கட்டுப்படுத்தவும், பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறிகளைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

English

Chemical substance produced naturally in the white blood cells that prevents the spread of viral infections. Interferon now is produced in laboratory cultures and has proved useful in the treatment of some cancers and leukemia. It also has been tested as treatment for immune deficiency diseases such as acquired immune deficiency syndrome (AIDS) or human immunodeficiency virus (HIV).