intergroup relations
பன்மைக் குழு உறவுகள்
தமிழ் விளக்கம்
வேறுபட்ட அடையாளங்களுடன் இன, மத, மொழி, பூகோளப் பிராந்தியம், சமூகப்பொருளாதார நிலையால் தனித்தறியப்படும் குழுக்களிடையே பரஸ்பர மரியாதை, ஒத்துணர்வு போன்ற செயல்பாடுகளில் தென்படும் உறவு நிலைகள். இதை இன உறவுகள் (race relations), மதங்களுக்கிடையேயான உறவுகள் (interreligious relations), கலாச்சாரங்களுக்கு இடையேயான கல்வி (intercultural education). என்றும் சொல்வர். குழுக்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு தடையாயிருக்கும் காரணங்களை அகற்றவும், குறைக்கவும், குழுக்களுக்கிடையேயான தப்பெண்ணங்களையும், வேறுபட்ட முன்னுரிமைகளைப் புரிந்துகொண்டு செயலாற்றவும் சமூகப்பணியாளர்கள் எப்போதும் ஈடுபாடு காட்டி வந்துள்ளனர். குழுக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த தேசிய, சர்வதேசிய அளவில் அமைப்புகள் இயங்கி வருகின்றன.
English
Societal institutions and activities that involve and seek to enhance operation and mutual respect between various identifiable sectors in the population, especially ethnic, racial, religious, geographic, socioeconomic, and other kinds of groups. These activities are also known as "race relations," "interreligious relations," and "intercultural education." Social work specialists often engage in intergroup activities in which they seek to remove or reduce the barriers, different priorities, and misunderstandings that exist between groups. Among the national organizations involved in intergroup relations are the National Conference of Christians and Jews, American Friends Service Committee, and the Southern Christian Leadership Conference (SCLC).