Interior, U.S. Department of the

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உள்துறை

தமிழ் விளக்கம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமெரிக்க அரசின் உள்துறை, 1849 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தத் துறை அமெரிக்காவின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, மீன் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு, கனிம வளங்கள் பாதுகாப்பு, தேசியப் பூங்காக்கள் பராமரிப்பு, அரசு மற்றும் பொதுக் கட்டிடங்கள் பராமரிப்பு, நில நிர்வாகம் போன்ற பொறுப்புகளை கவனித்து வருகிறது. இந்திய விவகாரங்களுக்கான பணியகம், தேசியப் பூங்காக்களுக்கான சேவையமைப்பு, அமெரிக்கப் புவியாதாரக் (geological survey) கணக்கெடுப்பு, நில நிர்வாகத்திற்கான பணியகம் என்று பல அலுவலகங்களைக் கொண்டது. கடந்த காலத்தில் கல்வி, மருத்துவ வசதிகள், மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்ற முக்கியமான விவகாரங்களையும் இந்த உள்துறை கவனித்து வந்தது.

English

The cabinet-level federal department established in 1849 whose primary mission is to conserve and develop the nation's natural resources, including its fish and wildlife, minerals and land management, national parks, government and public buildings, and many other programs. Components include the Bureau of Indian Affairs (BIA), the National Park Service, the Geological Survey, the Fish and Wildlife Service, and the Bureau of Land Management. At various times in its history, this department was also in charge of the nation's educational system, hospitals, and interstate commerce as well as the U.S. Bureau of the Census, which is currently under the U.S. Department of Commerce.