intermarriage
கலப்புத் திருமணம், மாற்றுமணம், வெவ்வேறு ஜாதியினரின் பரஸ்பர விவாகம், சாதிக்கலப்பு
தமிழ் விளக்கம்
இனம், மதம், சமூக நிலையால் வேறுபட்ட குழுக்களுக்கிடையே நடைபெறும் வெளிப்படையான (சட்டபூர்வமான) திருமணம். தமிழ்நாடு அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் மூலம், கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன், இருவகையாகப் பிரித்து அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது. இத்திட்டம் முன்பு அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டது. கலப்புத் திருமண நிதியதவி திட்டங்களின் கீழ் இரண்டு விதமாக நிதியுதவி செய்யப்படுகிறது. திட்டம் 1ல் முற்பட்ட வகுப்பை சார்ந்த ஒருவர் பிற்பட்ட / மிகவும் பிற்பட்ட வகுப்பினரை திருமணம் செய்து கொண்டால் இத்தம்பதியரில் 10 ம் வகுப்புவரை படித்த மணமகளுக்கு ரூ.20,000மும் அத்துடன் 4 கிராம் தங்கமும் அளிக்கப்படும். பட்டம் / பட்டயப்படிப்பு படித்த மணமகளுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.50000ம், (இதில் ரூ. 30,000 காசோலை, ரூ. 20,000 தேசிய சேமிப்பு பத்திரம்) 4 கிராம் தங்கமும் அளிக்கப்படும்.
திட்டம் 2: இல் தாழ்த்தப்பட்ட /பழங்குடி வகுப்பை சேர்ந்த ஒருவர் முற்பட்ட / பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினரை திருமணம் செய்து கொண்டால் இத்தம்பதியரில் 10 ம் வகுப்பு படித்த மணமகளுக்கு ரூ.25,000மும், பட்டம் படித்த பெண்ணுக்கு ரூ.50,000மும் 4 கிராம் தங்கமும் வழங்கப்படும். கலப்பு திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். வருமான உச்சவரம்பு கிடையாது. திருமண நாளில் இருந்து இரு ஆண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தம்பதியினரின் சாதி சான்று இணைக்கப்பட வேண்டும்.
,

English
Legal wedlock between individuals of different races, ethnic groups, religions, or social classes.