intermittent explosive disorder
விட்டுவிட்டு வெளிப்படும் மூர்க்கத்தனம்
தமிழ் விளக்கம்
தூண்டலுக்கோ, சீண்டலுக்கோ பொருந்தாத வகையில் ஆத்திரமடைவது அல்லது மூர்க்கதனமாக நடந்து கொள்ளும் நடத்தைக் கோளாறு. இது உண்மையிலே நடந்த, நடக்குமென்று பாவிக்கப்பட்ட, ஒரு செயலின் மீது திட்டமிடாமல் இயல்புக்கு மீறி வெளிப்படும் மூர்க்கத்தனம். கட்டுப்படுத்த முடியாத கோபம், அச்சுறுத்தும் வேகத்தில் வாகனம் ஓட்டுவது, காயமுண்டாகுமளவு பிறரைத் தாக்குவது, பொருட்களை உடைத்து சேதப்படுத்துவது, சண்டித்தனம் செய்வது, பிற வன்முறைப் பிரயோகம் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
English
Numerous repeated episodes of a loss of control of aggressive impulses and fits of rage out of proportion to any stressor. See also explosive disorder.