intermittent reinforcement
அவ்வப்பொழுது ஊக்கமளித்தல், அவ்வப்பொழுது உற்சாகப்படுத்துதல்
தமிழ் விளக்கம்
நடத்தை மாற்றச் சிகிச்சை முறைகளில், ஒரு நடத்தையை நிலைநிறுத்த, விரும்பிய நடத்தை வெளிப்படும்போது, அதைப் பாராட்டியோ, வெகுமதி அளித்தோ உற்சாகப்படுத்துவதுண்டு. இதைச் சம்பிரதாயமாக்காமல், தொடர்ந்து செய்யாமல், அவ்வப்பொழுது பொருத்தமான இடத்தில் பொருத்தமான நேரத்தில் செய்யும் முறையை அவ்வப்பொழுது ஊக்கமளித்தல் என்கிறோம்.
English
In behavior modification, a schedule of reinforcement in which one type of response is reinforced at some times but not at others.