International Bank for Reconstruction and Development

பன்னாட்டுப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (ஐ.பி.ஆர்.டி)

தமிழ் விளக்கம்

இந்த வாங்கி உலக வங்கிக் குழுமத்தில் உள்ள ஐந்து வங்கிகளில் ஒன்றாகும். உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய உலக வங்கிக் குழுமத்தின் முதன்மை நிறுவனம் ஆகும். உலக வங்கி, உலக வங்கிக் குழுமத்தின் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (International Bank for Reconstruction and Development- IBRD) மற்றும் பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (International Development Association - IDA) என்ற இரு நிறுவனங்களை மட்டுமே அங்கமாகக் கொண்டது. உலக வங்கிக் குழுமத்தில் இவற்றைத் தவிர மூன்று நிறுவனங்கள் அடங்கியுள்ளன: அவையாவன பன்னாட்டு நிதிக் கழகம் (International Finance Corporation - IFC), பலதரப்பு முதலீட்டு பொறுப்புறுதி முகமை (Multilateral Investment Guarantee Agency - MIGA), பன்னாட்டு முதலீட்டுப் பிணக்குகள் தீர்வு மையம் (International Centre for Settlement of Investment Disputes - ICSID) போன்றவையாகும்.
இரண்டாம் உலகப்போரில் பாதிப்படைந்த நாடுகளுக்கு உதவ உருவாக்கப்பட்டதே பன்னாட்டுப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி. இந்த வங்கி, தற்போது வளரும் நாடுகளின் வறுமை ஒழிப்பிற்கு உதவி வருகிறது. இறைமையுள்ள நாடுகளின் மூலம் நிதி ஆதரங்களைத் திரட்டிக்கொண்டு அந்நாடுகளின் உறுப்பினர்களால் நிர்வாகிக்கப்படுகிறது. இவ்வங்கி அரசாங்கத்திற்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அரசு உத்திரவாதத்தின் அடிப்படையில் கடன் வழங்குகிறது. 187 உறுப்பு நாடுகளின் மேம்பாட்டுக்காக கூட்டுறவு அடிப்படையில் இயங்குகிறது. மிககுறைந்த வட்டியில் மத்திய வருவாய் கொண்ட நாடுகளுக்கு நிதிக்கடன் வழங்குகிறது. உலக வங்கியும், உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டிசியில் தலைமை அலுவலகங்களை வைத்துள்ளது. இதன் தலைவர் எப்பொழுதும் ஓர் அமெரிக்கராக இருப்பதும், அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியராக இருப்பதும் வழக்கம். இதன் செயல்பாடுகள் பலதரபட்ட சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.

English

See World Bank.