International Classification of Diseases (ICD)
நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலகப் புள்ளியியல் வகைப்பாடு
தமிழ் விளக்கம்
நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலகப் புள்ளியியல் வகைப்பாடு (International Statistical Classification of Diseases and Related Health Problems) என்பது எல்லா வகையான நோய்கள், அவற்றின் அறிகுறிகள், நலச் சிக்கல்கள், நலக்கேடுகள், காயங்கள், மற்றும் இதர உடல்நலக் குறைபாடுளை வகைப்படுத்தி குழப்பம் ஏற்படாதவாறு புரிந்துகொள்ள குறியீடுகளை வழங்கும் முறை ஆகும். இக்குறியீட்டு முறைப்பிரசுரத்தை உலக சுகாதார அமைப்பு (World Health Organization) வெளியிடுகிறது. 'நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலகப் புள்ளியியல் வகைப்பாடு' என்பதை ஆங்கிலத்தில் சுருக்கமாக 'அனைத்துலக நோய்கள் வகைப்பாடு' (அ.நோ.வ) எனும் கருத்துக்கொண்ட ஐ.சி.டி (ICD - International Classifiaction of Diseases) என்ற சொல்லால் குறிப்பர். இதன் ஆறாவது பதிப்பு (1949) உளநலக் குறைபாடுகள் பிரிவை உள்ளடக்கிய முதல் பதிப்பாகும். இதன் பத்தாம் பாதிப்பை உருவாக்கும் வேலைகள் 1983 இல் ஆரம்பித்து 1992 இல் நிறைவுபெற்றது. அதுவரை சேர்க்கப்படாத நோய்ப்பட்டியல் புதிதாகச் சேர்க்கப்பட்டது. நாடுகளுக்குத் தக்கவாறு இவற்றில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பதினோராம் பதிப்பின் உருவாக்கம் உலக நல அமைப்பு மூலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 2015 ம் ஆண்டளவில் இது வெளியிடப்படலாம் என நம்பப்படுகின்றது.
English
A statistical classification of all human diseases, including mental disorders, that is compiled by the World Health Organization (WHO). The publication, generally referred to as the ICD and followed by an edition number, is issued about every 10 years. The first edition, called the International List of Causes of Death, was completed in 1900.