International Labour Organization (ILO)
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு / சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ)
தமிழ் விளக்கம்
International Labour Organization தொழிலாளர் நலத்திலும், பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தும் ஐக்கிய நாடுகள் அவையின் நிறுவனமாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. அதன் செயலகம் உலகம் முழுதும் அதன் மூலம் பணியமர்த்தப்பட்டவர்களால், பன்னாட்டு தொழிலாளர் அலுவலகம் என அறியப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் பணிகளுக்காக நோபல் அமைதி விருதினைப் பெற்றது. ஐக்கிய நாட்டு சபையின் இதர சிறப்பு நிறுவனங்கள் போலில்லாமால் சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் முத்தரப்பு நிர்வாக அமைப்பை - அரசுகள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களைக் கொண்டதாகவுள்ளது. இந்த அமைப்பு உலகெங்கிலுமுள்ள வேலைவாய்ப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு திட்டங்கள், முதியோர் பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கான இழப்பீடு, வேலையின்மைக் காப்பீடு, பொது தொழிலாளர் ஆரோக்கியம் மற்றும் கல்வி போன்ற பல தளங்களில் செயல்படுகிறது.
English
A specialized agency within the United Nations concerned about employment, economic security, and social services among people in the world's nations. ILO helps nations develop programs for economic development and social security, especially in oldage insurance, workers' compensation, unemployment programs, as well as health care and education benefits.