International League for Peace and Freedom

சமாதானம் மற்றும் சுதந்திரத்திற்கான சர்வதேசக் குழு

தமிழ் விளக்கம்

இந்த அமைப்பு சமாதானம் மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் குழுவாக உருவாகி, பின் இப் பெயரைப் பெற்றது. இதன் முதல் தலைவராக ஜேன் ஆடம் அம்மையார் செயலாற்றினார். முதல் உலகப்போரில் அமெரிக்கா மற்றும் பிறநாடுகள் பங்கேற்பதை இந்தக் குழு கண்டனம் செய்தது. இந்தக்குழுவின் தலைவி ஆகுமுன்பே ஜேன் ஆடம் அம்மையார் சமாதானக் கட்சி என்ற அமைப்பை அமெரிக்காவில் எழுச்சியுடன் நடத்தி வந்தார். இந்த அமைப்பில் முதல் தலைவியாக இருந்த ஜேன் ஆடம்ஸ் அம்மையாரும், அதன்பின் தலைவியான எமிலி கிரீன் பால்ச்சும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றனர். சமாதானம் மற்றும் சுதந்திரத்திற்கான சர்வதேசக் குழு தற்போது அகதிகளின் பிரச்சனைகள், மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை, போருக்கு எதிரான பிரச்சாரம் என்று சார்வதேச அளவில் செயல்பட்டு வருகிறது.

English

The organization established in 1915 as the Women's International Peace Congress under the leadership of Jane Addams and Emily Greene Balch to protest the entry of nations into World War I. The later work of this group greatly influenced President Woodrow Wilson's Fourteen Point Program for International Peace and the League of Nations. The group currently focuses on such problems as refugees, human rights violations, genocide, and antiwar activities.