International Social Security Association (ISSA)
சர்வதேச சமூகப் பாதுகாப்பு சங்கம் / அமைப்பு
தமிழ் விளக்கம்
160 நாடுகளைச் சேர்ந்த 340 சமூகப் பாதுகாப்புத் துறைகளையும், நிறுவனங்களையும் உறுப்பினராகக் கொண்டு, செயல்படும் இந்நிறுவனம், சர்வதேசத் தொழிலாளர் அமைப்புடன் இணைந்து பணியாற்றுகின்றது. உறுப்பினர் நாடுகளுக்கிடையே சமூகப் பாதுகாப்பு திட்டங்களை ஊக்குவிக்கவும், நடைமுறையிலிருக்கின்ற திட்டங்களை வலுப்படுத்தவும் செயல்பட்டு வருகிறது.
English
A membership organization of government departments and national institutions responsible for the administration and development of social security programs. ISSA disseminates information about social security between nations and promotes, protects, and helps develop social programs in all nations. ISSA publishes the International Social Security Review.