international social work

சர்வதேச சமூகப்பணி

தமிழ் விளக்கம்

இது சமூகப்பணி முறைகளையோ, சமூகப்பணியாளர்களையோ தங்கள் பணிக்காகப் பயன்படுத்தும் நிறுவனங்களையும், சமூகப்பணியில் (கல்வி, களப்பணி) நாடுகளுக்கிடையே நடக்கும் ஒத்துழைப்பையும், சமூகப்பணி பற்றிய தகவல்கள் நாடுகளுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்படும் செயல்களையும் உள்ளடக்கி பரந்த பொருளில் பயன்படுத்தப்படும் சொல். ஒவ்வொரு நாட்டிலும் சமூக நலனுக்கென்றும், சமூகப்பணிக்கென்றும் தனியாக துறைகள் இருப்பதால், அவற்றை ஒருங்கிணைத்து மக்களின் சமூக நலத் தேவைகளை பூர்த்தி செய்ய சர்வதேச சமூகப்பணி உதவுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் (United Nations International Children Emergency Fund - UNICEF), அமெரிக்க நாடுகள் அமைப்பு (Organization of American States - OAS), சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organization - ILO), ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific, and Cultural Organization - UNESCO) மற்றும் சர்வதேச சமூகப் பாதுகாப்பு சங்கம் (International Social Security Association -ISSA) போன்றவற்றையும், இது தவிர பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களான செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கம் (Red Cross and Red Crescent), இளம் ஆண்கள் கிறிஸ்துவர் சங்கம் (Young Men's Christian Association - YMCA), இளம் பெண்கள் கிறிஸ்துவர் சங்கம் (Young Women's Christian Association - YWCA), சர்வதேசக் குழந்தைத் தொழிலாளருக்கான கூட்டமைப்பு (International Union for Child Welfare (IUCW) போன்ற நிறுவனங்களை சர்வதேச சமூகப்பணி தொடர்புடைய நிறுவனங்கள் எனலாம். நல்ல எடுத்துக்காட்டு சர்வதேச சமூகபணியாளர் சங்கம் (International Federation of Social Workers (IFSW).

English

A term loosely applied to (1) international organizations using social work methods or personnel, (2) social work cooperation between countries, and (3) transfer between countries of methods or knowledge about social work. Virtually every country has a national department responsible for some phase of social services and personnel to carry out the functions of those departments. International social work organizations emphasize efforts to educate workers to ensure that social services needs are met. Organizations that have been active in international social work include the United Nations Children's Fund (UNICEF), the Organization of American States (OAS), the International Labour Organization (ILO), the International Social Security Association (ISSA), and the United Nations Educational, Scientific, and Cultural Organization (UNESCO). Many nongovernment organizations (NG0s) also have international social work aspects, including the Red Cross and Red Crescent, the Young Men's Christian Association (YMCA), the Young Women's Christian Association (YWCA), and the International Union for Child Welfare (IUCW). A major forum for international social work is the International Federation of Social Workers (IFSW). See also comparative social welfare.