internment

தடுப்புக்காவல்

தமிழ் விளக்கம்

சமூக அமைதிக்குப் பங்கம் விளைவிப்பார்கள் என்றோ, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்றோ, தேச துரோகச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்றோ சந்தேகிக்கும் நபர்களைத் தனியாகவோ அல்லது குழுவாகவோ விசாரணை ஏதுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் (சிறை) வைத்தல். தடுப்புக் காவல் என்பது சாம்பிராதயமான சிறைகளையும், அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களை அடைக்க பயன்படுத்தும் சிறை அல்லாத காவல் முகாம்களையும், வீட்டுக் காவலையும் மற்றும் சித்திரவதை முகாம்கள் என்று பல்வேறு முறைகளை உள்ளடக்கியது. சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின்படி நியாயமான விசாரணையின்றி சிறையிலடைப்பதும், தடுப்புக்காவலில் வைப்பதும், நாடு கடத்துவதும் மனித உரிமை மீறும் செயலாகும்.

English

Confinement to relocation camps, prisons, or other designated places during wartime of a group of people thought to be dangerous or potentially sympathetic to the enemy. Often such actions are based on mass hysteria or racism rather than evidence. Americans of Japanese ancestry experienced internment during World War II. See also Nisei generation.