interorganizational collaboration
நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு
தமிழ் விளக்கம்
ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களோ, அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களைச் சார்ந்த சமூகப்பணியாளர் குழுவோ ஒன்றிணைந்து, ஒரு பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது ஒரு வாடிக்கையாளருக்கு உதவவோ, விரிவான சேவைகள் வழங்குவதைப் பற்றி முடிவெடுத்து செயல்படுவது. சிலநேரங்களில் பரஸ்பர ஆர்வமுள்ள திட்டங்களில் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கலாம். இது ஒரு குறிக்கோளை மையப்படுத்தி, பல நிறுவனங்களைக் கொண்ட கூட்டுகுழுவின் மூலம் ஒத்துழைப்பு நிகழலாம் அல்லது வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தங்கள் பணியிலக்கை அடைய ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு சந்தேகம் தெளியலாம்.
பார்க்க intensive family preservation services (IFPS) - தீவிர குடும்பப் பரிபாலனச் சேவைகள், குடும்பப் பரிபாலனத்திற்கான முனைப்பான சேவைகள் - பல நேரங்களில் நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவிகள், அக்குடும்பங்களின் தேவையைப் பொருத்ததாக அமையாமல், உதவி செய்ய முற்படும் நிறுவனங்களின் தன்மையைப் பொருத்தே அமைவதால், குடும்பங்களுக்குத் தேவையான பொருத்தமான உதவிகள் கிடைப்பதில்லை. இதை நிவர்த்திக்கவே தீவிர குடும்பப் பரிபாலனச் சேவைகள் வடிவமைக்கப்பட்டது. குடும்பங்களை மையப்படுத்திய, சமுதாயம் சார்ந்த, குடும்பத்திலிருந்து குழந்தைகளைப் பிரித்து காப்பகங்களுக்கு அனுப்பாத, குழந்தைகளை வீட்டிலோ அல்லது அக்குடும்பத்திற்கு பரிச்சயமான இடத்திலோ வைத்து, குறுகிய காலத்திற்கு 24 மணிநேரமும் உதவி செய்ய, அதிக வேலைப்பளு இல்லாதபடி சமூகப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கும் திட்டம். எடுத்துக்காட்டாக சிறார் நீதிமன்றங்கள் பரிந்துரையின் பேரில் வரும் குடும்பங்களுக்கான தேவைகளும், மனநல மருத்துவமனைகளின் பரிந்துரையின் பேரில் வரும் குடும்பங்களுக்கான தேவைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆனால் இந்த இருவகைக் குடும்பங்களையும் உள்ளெடுக்கும் (intake) நிறுவனம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் இருவேறு வகைபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வது நிறுவனத் திறனிற்கு அப்பாற்பட்டதாக அமைந்துவிடும். இது மாதிரியான சந்தர்ப்பங்களில் நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்குத் தேவைப்படும் எல்லா உதவிகளையும் முழுமையாக வழங்க, தங்களுக்கிடையே பரஸ்பரம் ஒத்துழைக்கும் சமூக சேவை நிறுவனங்களைப் பயன்படுத்தி, சமூகப்பணியாளர் குழுவின் மூலம் சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கப்படும் முறையைத் தீவிர குடும்பப் பரிபாலனச் சேவைகள் அல்லது குடும்பப் பரிபாலனத்திற்கான முனைப்பான சேவைகள் எனப்படுகிறது. இதன்படி ஒரு வாடிக்கையாளரை, ஒரு குடும்பத்தை எந்த நிறுவனம் உள்ளெடுத்தாலும், வாடிக்கையாளரின் தேவைகளுக்கேற்ப பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பொருத்தமான சேவைகள் வழங்கப்படும்.

English
A system whereby social workers and other professionals from different agencies work together to make decisions about and provide a more extensive range of services for the same client than would be possible or efficient if one agency or one worker alone engaged the client. They also work together to develop new programs and services of mutual interest. The collaboration may be highly integrated (as in developing a single goal with a central mechanism to coordinate its attainment) or loose (as in agency professionals' communicating to coordinate the attainment of their autonomous goals). This type of system is used, for example, in intensive family preservation services (IFPS).