interpersonal skills
சகவாசத் திறமைகள்
தமிழ் விளக்கம்
மனிதர்கள் மற்றவர்களோடு தொடர்ந்து சகவாசம் வைத்துக் கொள்கிறார்கள் / உறவாடுகிறார்கள். இந்த உறவுகளை செம்மையாகப் பராமரிக்க ஒவ்வொருவருடனும் தனியாகவும், குழுவாகவும் தொடர்பு கொள்ள வேண்டும். இந்தத் தொடர்புகளை ஆரோக்கியமாகக் கொண்டுசெலுத்த வேண்டுமென்றால், ஒருவர் நினைப்பதைச் சரியாக உரையாடல் (மொழி) வழியாகவோ, உடல்மொழி மூலமோ தெரிவிக்க வேண்டும். உரையாடலுக்குச் சொற்களும், உடலைசைவும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிறர் பேசும் போது காது கொடுத்துப் பொறுமையாகக் கேட்பதாகும். கேட்டல் என்பது ஒரு கலை. உற்றுக் கேட்பது பேசுபவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை ஆகும். ஆரோக்கியமான சகவாசத் திறன்கள் கொண்டவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வார்கள். பிறருக்குப் புரியும்படியாகத் தெளிவாக வார்த்தைகளாலோ, உடல்மொழியாலோ எண்ணங்களைத் தெரிவிப்பது, பிறர் சொல்வதை அக்கறையுடன் காது கொடுத்துக் கேட்பது, பொருத்தமான கேள்விகள் மூலம் பிறர் கருத்தறிய முயல்வது, பிரச்சனைகள் ஏற்படும்போது அதைத் தீர்க்க முயல்வது, தன்னுடைய கருத்துக்களில், செயல்களில் வீண் பிடிவாதம் தவிர்த்து உறுதியுடன் இருப்பது போன்ற திறன்கள் ஒருவருக்கொருவரான உறவுகளை மேம்படுத்தும்.
English
See social skills.