interprofessional team

பல துறையினரைக் கொண்ட குழு

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட பிரச்சனையைத் தீர்ப்பதற்கோ அல்லது குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்கோ, பல்வேறு அறிவுத் துறைகளில் பயிற்சியும், தனித்திறன்களும் கொண்ட சிறப்புத் தொழிலினரைக் கொண்டு அமைக்கப்பட்ட குழு. இந்தக் குழு உறுப்பினர்கள், தங்களுக்குள் தொடர்ந்து கருத்து பரிமாறிக்கொள்வதன் மூலம் தங்களுடைய திறமைகளைப் பரிமாறிக்கொண்டும், தங்களுடைய கருத்துக்களை மறுசீராய்வுக்கு உட்படுத்தியும், குழுவின் குறிக்கோளையொட்டி ஒவ்வொரு உறுப்பினரும் எடுத்த முயற்சிகளை மதிப்பீடு செய்தும், குழுவின் குறிக்கோளை அடைய ஒன்றிணைந்து செயல்படுவது. சமூகப்பணியில் பல்துறை நிபுணர்கள் குழு பயன்பாடு, உளப்பிணி சிகிச்சையில் மட்டுமல்ல வேறு தளங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக பேரிடர் நிவாரணப்ப்பணியில் சமூகப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர், பொறியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொருளாதார மற்றும் அரசியல் துறை நிபுணர்கள் என்று பல்துறை நிபுணர்கள் கொண்ட பணிக்குழு செயலாற்றுவது நடைமுறை.
பார்க்க: பல்துறை குழு, பல்துறை ஒன்றிணைதல் - ஒரு வாடிக்கையாளருக்கோ அல்லது வாடிக்கையாளர் தொகுதியின் பிரச்சனை தீர பல அறிவுத்துறையினரோ அல்லது பல தொழில்துறையினரோ கூட்டாகச் செயல்படுவது. எடுத்துக்காட்டாக பல பிரச்சனைகளால் சிக்கலுக்கு உள்ளான குடும்பத்திற்கு சமூகப்பணியாளர், உளவியலாளர், குருமார்கள், மருத்துவர், செவிலியர் என்று பலரும் கூட்டாக இணைந்து உதவி செய்வது

English

A small, organized group of people, each number of which is trained in different professional disciplines and possesses his or her own skills and orientations, working together to resolve a common problem or achieve a common goal. The team members contribute their talents through continuous intercommunication, re-examination, and evaluation of individual efforts toward team objectives and with group responsibility for the final outcome. The interprofessional team may include, but is not limited to, the members of a mental health team (such as psychiatrists, psychologists, social workers, and psychiatric nurses). For example, a team that might be formed to provide a community with disaster relief could consist of social workers of various specializations as well as physicians, nurses, economists, architects, engineers, sanitation specialists, and political scientists. See also social work team, interdisciplinary teaming, and collaboration.