interrater reliability

பல்வேறு மதிப்பீடுகளுக்கு இடையேயான நம்பகத்தன்மை, பல்வேறு மதிப்பீட்டாளர்களுக்கிடையேயான நம்பகத்தன்மை

தமிழ் விளக்கம்

முறையாகச் செய்யப்படும் ஆய்வுகளில், சில கருத்துக்களின் மீது பலதரப்பட்டவர்கள் ஒரே மாதிரியான மதிப்பெண்களையோ, முன்னுரிமைகளையோ கொடுத்திருந்தால், அதை பல்வேறு மதிப்பீடுகளுக்கு இடையேயான நம்பகத்தன்மை அல்லது பல்வேறு மதிப்பீட்டாளர்களுக்கிடையேயான நம்பகத்தன்மை எனலாம். எடுத்துக்காட்டாக, ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும், சமூகப்பணியாளர்களிடம்,, அங்கு வரும் வாடிக்கையாளர்களின் பிரச்சனைப் பட்டியலைக் கொடுத்து, அதில் எந்தப் பிரச்சனையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டு அதை முன்னுரிமைப்படுத்தச் சொன்னால், அங்கு பணியாற்றும் சமூகப்பணியாளர்களில் பெரும்பாலோர் முன்னுரிமைப்படுத்தும் பிரச்சனைகள் ஒரே மாதிரியாக இருக்கும் பட்சத்தில், அதை பல்வேறு மதிப்பீடுகளுக்கு இடையேயான நம்பகத்தன்மை அல்லது பல்வேறு மதிப்பீட்டாளர்களுக்கிடையேயான நம்பகத்தன்மை எனலாம்..

English

In systematic research, the degree to which different people give similar scores for the same observation. For example, a researcher might give all the social workers in an agency identical lists of a client's problems and then ask them to rank those problems according to which must be dealt with first. If the social workers identify the same problems for immediate attention, this would be described as "high interrater reliability."