intersectoral planning
ஒன்றிற்கொன்று தொடர்புடைய துறைகளில் திட்டமிடுதல்
தமிழ் விளக்கம்
மானுடப் பிரச்சனைகள் ஒன்றிற்கொன்று தொடர்புடையதாகையால், ஒன்றிற்கொன்று தொடர்புடைய துறைகளில் திட்டமிடுதல் என்பது பிரச்சனைகளை விரிவான கண்ணோட்டத்துடன் அணுகும் முறையின் வெளிப்பாடாகும். சமூகத் திட்டமிடுதலில், இந்த அணுகுமுறையைப் பெரும்பாலும் கையாள்வார்கள். எடுத்துக்காட்டாக கிராமப்புற மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டை, மருத்துவ வசதிகளை வலுப்படுத்தும் ஒற்றைச் செயல்பாட்டினால் அடையமுடியாது. அதற்கு வேளாண்மை, கல்வி, குடிநீர், சுற்றுப்புறச் சுகாதாரம், போக்குவரத்து போன்ற பலதுறை மேம்பாடுகளும் ஒரே நேரத்தில் செய்யப்பட்டாக வேண்டும். இதற்கு அந்தந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள், அவர்களின் செயல்பாடுகள் மற்றும் வாய்ப்புகளைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும். தொடர்புடைய துறைகள் தங்கள் இலக்குகளை அடைய ஏதுவாகத் திட்டமிடப்படவேண்டும்.
English
The attempt by social planners to look at problems or groups of people in a comprehensive fashion. This makes possible the coordination and integration of the efforts of single-issue organizations, which focus their efforts on one problem (sectoral planning). Intersectoral planning occurs, for example, in welfare councils and agencies of Community Action Program (CAP) and on human resources commissions. See also social planning.