interview

பேட்டி, நேர்காணல், நேர்முகத்தேர்வு, நேரில் சந்தித்து பேசுவது

தமிழ் விளக்கம்

முன்னரே தீர்மானத்த ஒரு விசயத்தைப் பற்றி இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ குறிப்பிட்ட பாணியில் (கேள்வி - பதில்) உரையாடுவது அல்லது கருத்துக்களைத் தெரிவிப்பது. கருத்துக்களைச் சொல்ல ஏதுவான கேள்விகளையோ அல்லது சூழலையோ உருவாக்குபவர் பேட்டி காண்பவர் என்றும், கருத்துக்களைச் சொல்பவர் பேட்டி அளிப்பவர் என்றும் சொல்லப்படுவர். நேரில் கண்டு சொல்லாடும் / தொடர்பாடும் முறை எல்லாத் துறைகளுக்கும் பொதுவானது. சமூகப் பணியில் பேட்டிகாணும் முறை என்பது வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதற்கும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் முக்கியமாகப் பயன்படுகிறது. சமூகப்பணியாளர்களால் பலவிதமாத பேட்டிகாணும் முறைகள் கையாளப்படுகின்றன. வழிகாட்டும் பொருட்டும், பயனுள்ள நடத்தைகளை வெளிக்கொணரும் பொருட்டும் சொல்லப்படும் தகவல்கள், ஆலோசனைகள், பரிந்துரைகள் அடங்கிய பேட்டிமுறைகள், தகவல் அறிய உதவும் பேட்டி முறைகள், வாடிக்கையாளரை உள்ளெடுக்க, வாடிக்கையாளராக ஏற்றுக்கொள்ள பயன்படும் பேட்டிமுறைகள் (intake interview) என்று பலவகைகள் இருக்கின்றன. பேட்டி காணப்படுபவர்களும் தனிநபர்களாக, குழுக்களாக, குடும்பங்களாக, முழுச் சமுதாயமாக இருக்கலாம்.

English

A meeting between people in which communication occurs for a specific and usually predetermined purpose. When the interview is between a social worker and client, the most typical purpose is some form of problem solving. To achieve that purpose, there are many types of social work interviews, including directive therapy, nondirective therapy, fact-gathering interview, and intake. Interviews may be with individuals, groups, families, and communities. Most interviews often combine different types in the same sequence of contacts.