intimacy

உள்ளார்ந்த உறவு, நெருக்கமான உறவு, கடுஞ் சிநேகம், நெருங்கிய நட்பு, தொடுப்பாயிருத்தல், அன்னியோன்னியம், சௌசன்னியம், நற்பிரியம், கெழுதகைமை, மனக்கலப்பு

தமிழ் விளக்கம்

உள்ளார்ந்த நெருக்கமான உறவென்பது உடல், மன ரீதியாக நெருக்கமாயிருப்பது, ஒத்துணர்வோடிருப்பது (empathy), ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர அக்கறை காட்டுவது. தங்களுடைய அந்தரங்க உணர்வுகள் மற்றும் தேவைகளைப் பரஸ்பரம் தெரிவித்துக்கொள்ளும் படியான நிலையிலிருப்பது. அன்பு செலுத்தப்படவேண்டுமென்ற அடிப்படைத் தேவையை (need for love) நெருக்கமான உறவுகளே பூர்த்தி செய்கின்றன. அருகைமையிலிருத்தல் (physical closeness), ஒத்த உணர்வுகளோடிருத்தல் (emotional), சமமான அறியும் தன்மை கொண்டிருத்தல் (cognitive), ஒரே மாதிரியான அனுபவங்களைப் பெற்றிருத்தல் (experiential) போன்றவை நெருக்கமான உறவுகளுக்கு வழிவகுக்கும். நெருக்கமான உறவுகளைக் குறிக்க காதலன் / காதலி, கணவன், மனைவி, தோழர், பங்காளி, தாயாதி, பாலியல் பங்குதாரர் இதைப்போன்ற இன்னும் பல சொற்கள் பயன்படுத்தப்படுகின்றது.

English

A strong sense of physical and emotional closeness, empathy, and attachment that permits mutual caring and communication about the most personal feelings and needs.