intimacy versus isolation

நெருக்கமாயிருத்தல் X தனிமைபட்டிருத்தல்

தமிழ் விளக்கம்

(Love: Intimacy vs. Isolation (Young adulthood, 20-40 years) - எரிக் எரிக்சனினால் முன்வைக்கப்பட்ட மனித வளர்ச்சி நிலைகளில் ஆறாவது நிலையாகும். மனித வளர்ச்சி நிலைகளைப் பல்வேறு உளவியலாளரும் பல கோணங்களில் ஆராய்ந்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அறிவு வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு பியாஜேயும், உளப்பகுப்பு நிலையினைக் அடிப்டையாகக் கொண்டு சிக்மண்ட் பிராய்டும், ஒழுக்க நிலையினைக் கருத்திற்கொண்டு கோல்பேர்க்கும், உள-சமூகவிருத்தி நிலையினைக் கொண்டு எரிக்சனும் விளக்கியுள்ளனர். எரிக்சனின் உள சமூகவிருத்தி நிலைகளாவன 1. அடிப்படை நம்பிக்கை Vs நம்பிக்கையின்மை (Hopes: Trust vs. Mistrust (Oral-sensory, Birth-2 years), 2. சுயசெயற்பாடு Vs வெட்கமும் சந்தேகமும் (Will: Autonomy vs. Shame & Doubt (Muscular-Anal, 2-4 years), 3. ஆர்வம் Vs குற்ற உணர்வு (Purpose: Initiative vs. Guilt (Locomotor-Genital, Preschool, 4-5 years) 4 விடாமுயற்சி Vs தாழ்வுணர்வு, (Competence: Industry vs. Inferiority (Latency, 5-12 years) 5. சுயஅடையாளம் Vs கடமைக் குழப்பம் (Fidelity: Identity vs. Role Confusion (Adolescence, 13-19 years),6. நேசம் Vs தனிமையாக்கம் (Love: Intimacy vs. Isolation (Young adulthood, 20-24, or 20-39 years), 7. ஆக்கம் Vs அசைவற்ற தன்மை Care: Generativity vs. Stagnation (Middle adulthood, 25-64, or 40-64 years), 8 அக உறுதிப்பாடு Vs நம்பிக்கையிழப்பு (Wisdom: Ego Integrity vs. Despair (Late adulthood, 65-death).
இதில் ஆறாம் நிலையே நெருக்கமாயிருத்தல் X தனிமைபட்டிருத்தல் ஆகும். இந்த நிலையில் பிறருடன் அன்புடனும், நெருக்கமாகவும் இருக்க விரும்புவர். காதலிக்கத் தொடங்கும் வயது. அன்பு செலுத்துவதும், அன்பைப் பெருவதும் அடிப்படை மனிதத் தேவையாதலால் தன்னைச் சுற்றியுள்ள குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பரஸ்பரம் நெருக்கமாயிருக்கவும், அன்பு செலுத்தவும் முயல்வர். இதில் வெற்றியடைவதென்பது மேலும் அன்பாயிருக்க, நெருக்கமாயிருக்க உதவும். அதில் தோல்வியடையும் போது தனிமைப்படுத்தப்பட்டு, தனியனாய் உணர்வர்.

English

According to the psychosocial development theory of Erik Erikson (1902-1994), the sixth of eight stages that occurs at about ages 18 to 24. The individual faces the challenge of developing one or more close and warm relationships or facing life alone.