intrapsychic

மனதினுள், உள்ளத்தினுள்

தமிழ் விளக்கம்

ஒருவரின் உள்ளத்தினுள் நடக்கும் செயல்பாடுகள். இது நினைவு மனக் கட்டுப்பாடுடனோ (egosyntonic) அல்லது நினைவு மனக் கட்டுப்பாடின்றியோ (egodystonic) நடக்கலாம். மனக் கட்டுப்பாட்டுடன் நடக்கும் உள்மனச் செயல்பாடுகள், கல்வியின் மூலமாகவும், தொடர்புகளின் மூலமாகவும் மேலும் மெருகேறும். கட்டுப்பாடற்ற உள்மனச் செயல்பாடுகள் சமூகக் கடமையாற்றுவதிலும், சமூக நெறிகளைப் பின்பற்றுவதிலும் முரண்பாடுகளைத் தோற்றுவித்து மன அழுத்ததிற்கு வழிவகுக்கும்.
பார்க்க: egosyntonic - அகம் வெளிப்படுத்தும் ஆளுமை - சூழலோடு ஒத்திசைந்து செல்லும் அகம் - இது உளவியல் தன்னிசைவைக் குறிக்கும் சொல், ஒருவருடைய தன்முனைப்பிற்கும், சுய அடையாளத்திற்கும் இணக்கமான நடத்தைகள், மதிப்புகள், உணர்வுகளைக் கொண்டிருப்பது.
ego alien அல்லது Egodystonic - இது உளவியல் தன்னிசைவுக்கு எதிரானது. ஒருவருடைய எண்ணங்கள் மற்றும் நடத்தைகள் (எ.கா., கனவுகள், தூண்டுதல்கள்,, நிர்பந்தங்கல்ள், ஆசைகள், முதலியன) அவருடைய தன்முனைப்பிற்கும், சுய அடையாளத்திற்கும் பொருந்தாத உணர்வுகளைக் கொண்டிருப்பது.

English

Occurring within one's personality or psyche.