introjection

மனிதர்கள் அல்லது பொருட்களின் தன்மையை / பண்பை உள்வாங்குதல் அல்லது தனதாக்கிக் கொள்ளல், உள்வீச்சு, புற உலகப்பொருள்களுடனும் உயிர்களுடனும் ஒன்றுபட்டு அவற்றின் தன்மைகளை தமதாக உணரும் உணர்வு, அகவயமாக்கல்

தமிழ் விளக்கம்

தனதாக்கல் என்பது உளப்பகுப்பாய்வில் பயன்படுத்தபடும் சொற்பிரயோகம். இது அடையாளம் காணப்பட்ட பல உளப்பாதுகாப்பு முறைகளில் ஒன்று. பிரதிச் செயல் (இல்லாத ஒன்றை வேறு ஒன்றால் ஈடுகட்டல் - compensation), பிரச்சனையைப் பார்க்க மறுத்தல் (denial), பிறர்மீது பழிசுமத்தல் (displacement), விலகியிருத்தல் (dissociation), அடையாளப்படுத்தல் (identification), தன்வயமாக்கல் (introjection), பிறவயமாக்கல் (projection) போன்ற உளப்பாதுகாப்பு முறைகளில் ஒன்று. தனதாக்குதல் என்பது மனிதர்களதோ அல்லது பொருட்களதோ பண்புகளை உள்வாங்கிக்கொள்ளல். அடையாளப்படுத்தல், இணைத்தல், உள்வாங்குதல் (internalization) போன்ற செயல்பாடுகள் இதன் பொருளோடு சம்பந்தப்பட்டதென்றாலும், அதிலிருந்து சற்று வேறுபட்டது. இது ஆழ்மனதில் அடக்கிவைக்கப்பட்ட எண்ணங்களிலிருந்து விடுவித்து தற்கவர்ச்சியிலிருந்து (autoerotic) மனதை விரிவாக்கி, மேல்மனதை (அதியகம் - Super ego) விரிவாக்கும் தன்மை கொண்டது.

English

In psychoanalytic theory, a mental mechanism in which the individual derives feelings from another person or object and directs them internally to an imagined form of the person or object. For example, an individual may introject parental criticism, turning it into some type of self-criticism.