introvert
அகமுக நோக்காளர், சிந்தனையை உட்புறமாகத் திருப்பும் இயல்புடையவர், அகமுகச் சிந்தனை செய், எண்ணங்களை உள்நோக்கித்திருப்புதல், தன்னைப் பற்றியே எண்ணுதல்
தமிழ் விளக்கம்
மனிதர்களை அவர்களின் ஆளுமையையை வைத்து அகமுகன் (introvert), புறமுகன் (extrovert), இருமுகன் (ambivert) என்று வகைப்படுத்தியவர் கார்ல் யூங் என்ற உளவியலாளர். ஒருவருடைய மன சக்தி, ஆர்வம், சிந்தனை, உணர்வுகள் அவரையே மையம் கொண்டிருப்பின் அவரை அகமுகன் எனலாம். இவர்கள் பெரும்பாலும் தனித்திருக்கவே விரும்புவர். படித்தல், எழுதுதல், கணனியை உபயோகித்தல் போன்ற பிறரின் தலையீடற்ற செயல்களில் ஈடுபடுவர். எல்லோருடனுமல்லாமல் தங்களுக்கு நெருக்கமான, நம்பிக்கையான நண்பர்களுடன் இருக்க விரும்புவர். பலவேலைகளை ஒரே நேரத்தில் செய்யாமல், ஒருவேலையில் மட்டும் கவனம் செலுத்துவர். ஒன்றைப் பற்றிப் பேசுமுன் அதைப்பற்றி சிந்தித்த பின் தான் பேசுவர். அகமுகன் புறமுகன் என்பது ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட ஆளுமைகளல்ல. மாறாக அது ஒரு நேர்க்கோட்டில் அமைந்துள்ள இருமுனைகள்.
English
One whose psychic energy, interests, thoughts, and feelings tend to be directed inward rather than toward the social and physical environment; the opposite of an extrovert.