intuition

உள்ளுணர்வு, இயலுணர்வு, ஆய்வாராய்வு இல்லாமலே ஏற்படும் நேரடி உணர்வு, நேரடிப்பொறி உணர்வு, திடீர் உணர்வுத்திறம், அகத்திற உணர்வு, சுபாவஞானம், அறிவின் உதவியின்றி சில மெய்மைகளை உணரமுடியும் என்னும் கோட்பாடு, அனுபூதி, அனுபவ ஞானம், உணர்கை, தோன்றுகை, தோற்றுகை

தமிழ் விளக்கம்

மனிதர்களைப் பற்றியும், நிகழ்வுகளைப் பற்றியும் ஓரளவு துல்லியமாக ஆய்வாராய்வு இல்லாமலே உய்த்துணரும் நிலை. சிலநேரங்களில் இதுதான் உண்மையான உளத்தெளிவு, புரிதல் எனப்படுகிறது. உள்ளுணர்வால் எடுக்கப்பட்ட சரியான முடிவுகளைப் பற்றி ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருந்தாலும், அது எப்படி நிகழ்கின்றது என்று விளக்க முடியாததால், உள்ளுணர்வு என்ற கருத்தாக்கம் புதிராகவே கருதப்படுகிறது. அறிவுபூர்வமாக நியாயப்படுத்தபட முடியாவிட்டாலும், உள்ளுணர்வு தரும் பார்வை (views), புரிதல் (understanding), தீர்மானங்கள் (judgements), மற்றும் நம்பிக்கைகள் (beliefs) பலநேரங்களில் சரியாகவே அமைகின்றது. அழகியல் உணர்வுக்கும், படைப்புத்திறனுக்கும் காரணமான மூளையின் வலப்பக்கம் உள்ளுணர்வுச் செயல்பாட்டிற்கும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உள்ளுணர்வே காரணமாக அமைந்ததாக சில விஞஞானிகளின் கூற்று கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

English

An informal lay term referring to an individual's perceptiveness, awareness of characteristics and feelings within another person, and accurate sense of what is going to happen.