investment-versus-consumption concept

(சமூக நல) முதலீடு நுகர்வு பற்றிய கருத்தாடல்

தமிழ் விளக்கம்

சமூகநலத் திட்டங்களில் முதலீடு செய்வதன் நோக்கங்கள் பற்றியும், அதன் பயனாளர்களின் தன்மை பற்றி சமூகத் திட்டமிடலாளர்கள் கொண்டிருக்கும் கருத்து முரண்பாடுகள். மக்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து, அவர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தி, சமூக உறவுகளை செம்மைப்படுத்த உதவும் சமூக நலத்தில், திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என்பது ஒருசாரார் கருத்து. மறு சாராரோ இதற்கு மாற்றாக, சமூகநலத் திட்டங்களில் முதலீடு செய்யப்படுவது, அனைவருக்குமாக அல்லாது, பின்தங்கிய மக்களைக் குறியிலக்காகக் கொண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையே பிரதான குறிக்கோளாகக் கொள்ளவேண்டுமென்று கருதுகின்றனர்.

English

A controversy about the ultimate objectives of social services, often faced in social planning. The one view (investment) holds that social programs should exist as an economic and social investment by enabling recipients to become more economically productive and that social services programs that serve this purpose should have priority. The other view (consumption) holds that social programs should provide goods and services to disadvantaged people to improve their standard of living and that this is a worthwhile goal in itself. See also human capital.