invisible loyalties
மறைந்திருக்கும் விசுவாசம்
தமிழ் விளக்கம்
1. மறைந்திருக்கும் விசுவாசம் என்பது வணிக நிறுவனங்கள் விளம்பரங்களின் மூலம் தங்கள் பொருட்களின் பெயர்களை, சின்னங்களை நுகர்வோரின் ஆழ்மனதில் பதியவைத்துத் தங்களின் பொருட்களுக்கு நிரந்தர வாடிக்கையாளர்களாக்குவது. 2. குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும், தங்களின் வாழ்க்கைக் குறிக்கோளை கட்டமைக்க உதவியவர்களிடத்தில், எடுத்துக்காட்டாக பெற்றோர்கள், தாத்தா பாட்டியர், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மீது வைத்திருக்கும் விசுவாசத்தைக் குறிக்கும். குடும்பச் சிகிச்சை முறைகளில் மறைந்திருக்கும் விசுவாசம் கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கின்றது. காரணம், மனிதர்கள் மேல் வைத்திருக்கும் ஆழ்மன விசுவாசம் வாழ்க்கையில் இலட்சியங்களை அடைய ஒருபக்கம் உதவுகிறது. இந்த விசுவாசமே தேவையான மாறுதல்களை நாம் கைக்கொள்ள விடாமல் தயக்கம் ஏற்படுத்துகிறது. எ.கா. தன் குடும்பத்தியனர் மீது கொண்ட விசுவாசம், காதல் மணத்திற்கு தடையாக அமையும்.
English
Alliances between family members that occur outside the conscious awareness of any of them. Most commonly this family therapy term refers to unconscious commitments that children acquire to support one or both parents or other family members.