irresistible impulse test

அடக்கமுடியாத உணர்ச்சி சோதனை

தமிழ் விளக்கம்

உளப்பிணியாளர்கள் (பைத்தியக்காரர்கள் - insane) கணநேர உணர்ச்சித் தாக்குதலுக்குள்ளாகி ஒரு செயலின் விளைவறியாது குற்றமிழைப்பதால், குற்றப்பொறுப்பிலிருந்து அவர்களுக்கு விதிவிலக்களிக்கும் குற்றவியல் நடைமுறை. அடக்கமுடியாத உணர்ச்சி சோதனையென்பது குற்றம் சாட்டப்பட்டவர் மனப்பிறழ்வு விளைவினால் அக் குற்றத்தைச் செய்தாரா என்று கண்டறியும் சோதனையாகும். மனப்பிறழ்வு நிலையிலிருந்து குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அக்குற்றப்பொறுப்பிலிருந்து அவர் நீதி மன்றத்தால் விடுவிக்கப்படலாம்.

English

A legal question used in insanity defense cases. A defendant who knew that an act was wrong may still be acquitted under this test if, because of some mental disorder, the person was unable to control behavior. See also McNaughten rule.