irritable bowel syndrome

எரிச்சலுடன் கூடிய குடல் நோய், குடலெரிச்சல் நோய்

தமிழ் விளக்கம்

எரிச்சல் கொண்ட குடல் நோயினால், வயிற்று வலி, வயிற்றில் சங்கடம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், உணவு உண்டவுடன் மலம் கழிக்க ஏற்படும் உணர்வு போன்ற தொந்தரவுகளுக்கு உள்ளாகலாம். குடல் எரிச்சலுக்கு இதுதான் மூல காரணம் என குறிப்பிடும் உள் காரணம் எதுவும் இருக்காது. இதற்கெனத் தீர்வான மருத்துவ சிகிச்சை என்று ஒன்றினை முழுமையாகத் தர முடியாவிடினும் இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்கக் கூடிய சில வழிமுறைகளைக் கையாள முடியும். அடிப்படையில் இது ஆபத்தானது என்றில்லாவிடினும், நிரந்தரத் தொந்தரவாக ஒருவருக்கு இருக்கும். வயது 50-க்கு மேல் இருப்பவர்களுக்கும், இந்த காரணத்தினால் எடை குறைபவர்களுக்கும், பரம்பரைப் பாதிப்பு உடையவர்களுக்கும் கழிவுடன் கூடிய ரத்தப் போக்கு உடையவர்களுக்கும் கூடுதல் பரிசோதனையும், சிகிச்சையும் தேவை. பொதுவில் இது மூளைக்கும், வயிற்றுப் பாதைக்கும் தொடர்புடையது. சில நேரங்களில் குடலில் ஏற்படும் கிருமி பாதிப்புகளாலும் மற்றும் சில மருத்துவக் காரணங்களாலும் இதுபோன்ற அறிகுறிகள் இருக்கலாம். மருத்துவப் பரிசோதனை மூலமே இதனைக் கண்டறிய முடியும்.
குடல் எரிச்சல் நோய் கொண்டவர்கள் அடிக்கடி அன்றாடம் ஏற்படும் தொந்தரவினால் சமூகத்தில் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியாமல் மனச் சோர்வு அடைவர். குடல் எரிச்சல் நோய் அறிகுறிகள்: வயிற்று வலி. அதிகமான வயிற்றுப் போக்கு (அ) அதிகமான மலச்சிக்கல், வயிறு உப்பசம், உடல் அசதி, உடல் வலி., தலைவலி. அதிக கவலை, மன உளைச்சல் கொண்டவர்களையே இந்த நோய் பாதிக்கின்றது. இதனைப் பற்றிய மருத்துவ ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன. மருத்துவ ஆலோசனை மூலம் இந்நோயினை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

English

A health condition with such symptoms as constipation, diarrhea, abdominal pains, and other digestive disorders that occurs when the contractions that push waste through the intestines become irregular.