irritation response theory
எரிச்சலை சமாளிக்கும் பாங்கு, அசௌகரியத்தைச் (எரிச்சலை) சமாளிக்கும் பாங்கு
தமிழ் விளக்கம்
எரிச்சல் (Irritation) என்பது ஒருவரின் அசௌகரியத்தினைக் குறிக்கும். ஒருவரைத் தன்னிலையிலிருந்து நழுவ வைக்கும் நிகழ்வையோ, செயலையோ எரிச்சலூட்டும் செயலெனக் கூறலாம். இந்த எரிச்சலிலிருந்து விடுபட மனிதர்களும் உயிரினங்களும் தன்னிச்சையான முயற்சிகளை எடுப்பர். சிப்பிகளின் உடலினுள்ளே மணல் புகுந்துவிடின் அது எரிச்சலினை உண்டாக்கி, சிப்பியின் எதிர்க்கும் தன்மையினைத் தூண்டி, சிப்பிக்குள் முத்துக்கள் உண்டாகும். இதைப்போல சமூகநலத் திட்டங்களை அரிதாக்கினால், அதைப் பெறுவதென்பது இழிவானது என்ற நிலை உருவானால், மனிதர்கள் தங்கள் சுயமுயற்சியின் மூலம் வாழ்க்கையை மேம்பாடடையச் செய்ய முயலுவர் என்பது பொருளாதாரம் மற்றும் சமூகத் திட்டமிடலாளர்களின் கருத்து.
English
The view, held by some economists and social planners, that people will strive harder to improve their circumstances if social welfare is punitive and minimal.