isms
கோட்பாடு, தத்துவ அமைப்பு, தத்துவம், சிந்தனைப் பள்ளி
தமிழ் விளக்கம்
ஒரு சொல்லின் பின்னிணைக்கப்படும் ism என்ற சொல் தனித்த கோட்பாடுகளையோ, சித்தாந்தங்களையோ, ஆதாரமற்ற முன்முடிவுகளையோ குறிக்கும் சொல். இது அனைத்து மக்களின் சிந்தனை முறையிலும் தாக்கம் செலுத்தி, இணக்கமான மற்றும் பிணக்கமான நடத்தைகளைத் தோற்றுவிக்கும். எடுத்துக்காட்டு - மனித சிந்தனையில் பெரும் தாக்கத்தைச் செலுத்திய பொருள்முதவாதம் (materialism) மற்றும் சோசலிசம் என்ற சித்தாந்தம். சமூகப்பணியாளர்கள் தங்கள் பணியின்போது தாங்களும், தங்கள் வாடிக்கையாளர்களும் நம்பும் சித்தாந்தங்கள் உருவாக்கும் நடத்தைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. இனவாதம் (racism), முதியோர்களைப் பற்றி மாற்றமுடியாத ஏளன பாவனை (ageism), கொடுந்தேசியவாதம் (fascism), தற்காதல் வாதம் (narcism), பேராண்மை வாதம் (heroism) பிறர்நலப்பிரிய வாதம் (altruism), பெண்ணிய வாதம் (feminism) போன்றவை எடுத்துக்காட்டுகள். 150 க்கு மேற்பட்ட சித்தாந்த அணுகுமுறைகள் இருப்பதாகவும், இந்த சித்தாந்த முறைகளின் மீதான நம்பிக்கை பலவிதமான நடத்தைப் போக்குகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
English
As used in social work, this suffix has become a term in itself and refers to the group of ideologies and prejudgments that most affect social work clients. Some social workers think of the "isms" only as negative belief systems and resulting behaviors (such as racism, ageism, fascism, or speciesism). However, there are many other "isms" that many people do not consider negative (such as heroism and altruism).