isolation

தனிமை, தனித்திருத்தல், தனிப்படுத்தல், தொடர்பின்மை, தனிப்படுத்தப்பட்ட நிலை, தனிமையாக்கம், ஒதுக்கிவைப்பு, விலக்கிவைப்பு

தமிழ் விளக்கம்

சமூகவியல், உளவியல், மருத்துவம், நிர்வாகம் போன்ற பல துறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகின்ற சொற்பிரயோகம். சமூகவியலில் நபர்களுக்கிடையோ, குழுக்களிடையோ அல்லது சமூகத்துடனோ இயல்பான தொடர்புகளற்று இருத்தல். உளவியலில் பயத்தின் காரணமாகவோ, வெறுப்பின் காரணமாகவோ மற்றவர்களிடமிருந்து தனித்திருத்தல். உளஇயக்கக் கோட்பாட்டின்படி கடந்த காலக் கசப்பான உணர்வுகளிலுள்ள கசப்பை மட்டும் பிரித்து அதை வெறும் நினைவுகளாகப் பிரித்து வைத்தல். மருத்துவத்தில் தொற்றுநோயுள்ளவரை தொற்றுநோய் ஒதுக்கிடத்தில் பிரித்துவைத்தல். அரசியலில் ஒருநாடு, பன்னாட்டு விவகாரங்களிலிருந்து ஒதுங்கி இருத்தல். நீதி நிர்வாகத்தில், கொடுங்குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகளிடமிருந்து பிரித்துத் தனிமைச் சிறை வைத்தல்.

English

1.The condition of being separated and kept apart from others. 2. Psychologically, it is aversion to or fear of contact with others. 3. In psychodynamic theory, it is a defense mechanism in which memories are separated from the emotions that once accompanied them. For example, a client may have been terrified when subjected to child abuse, but when relating the incident to the social worker 20 years later, the client seems to feel indifferent to it.