It takes a village
ஒரு கிராமமே தேவைப்படும்
தமிழ் விளக்கம்
இச்சொற்றொடர் அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் அவர்களின் துணைவியார் திருமதி ஹிலாரி கிளின்டன், ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமமே தேவைப்படும் என்ற ஆப்ரிக்கா பழமொழியியைக் கையாண்டு அவர் எழுதிய புத்தகத்திற்கு வைத்த பெயர். குழந்தைகளைப் பேணவும், வழிகாட்டவும், அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டவும், பெற்றோர்களோடு, உறவினர்கள், அண்டைவீட்டார்கள் மற்றும் ஒரு சமுதாயமே அக்கறை காட்டவேண்டும் என்ற கருத்து.
English
An African expression popularized by First Lady Hillary Rodham Clinton referring to the optimal way to raise children involving not just the parents, but also relatives, neighbors, and everyone in the community acting together to provide nurturance, guidance, and positive role models.