Jacobs, Frances Wisebart (1843-1892)

பிரான்சஸ் ஜேக்கப்ஸ் வைஸ்பர்ட் (1843-1892)

தமிழ் விளக்கம்

பிரான்சஸ் ஜேக்கப்ஸ் வைஸ்பர்ட் (1843-1892) - நாற்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்த யூத இனத்தைச் சேர்ந்த இந்த அம்மையார், தன்னார்வத் தொண்டராகவும், டென்வர் நகரத்தில் அறக்கட்டளை அமைப்புகளை ஒருங்கிணைக்கும் உந்துசக்தியாகவும் செயல்பட்டிருக்கின்றார். இவரால் முன்னெடுக்கப்பட்ட டென்வர் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு, தேசிய அளவில் ஐக்கிய மார்க்கம் (united way) என்ற நிறுவனமாக உருவாகவும், தேசிய சமுதாயப் பொதுநிதி (national community chest) அமைப்பு உருவாகவும் அடித்தளமிட்டன. யூத மகளிர் நலச் சங்கம், டென்வர் மகளிர் நிவாரணச் சங்கம், மழலையர் பள்ளி, டென்வர் யூத மருத்துவமனை போன்ற அமைப்புகள் இவரால் ஏற்படுத்தப்பட்டது. நிமோனியக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழ்ந்தை ஒன்றுக்கு மருந்து கொடுக்கக் கொட்டும் மழையில் நெடுநேரம் சென்றதன் விளைவாக, இவருக்கு நிமோனியத் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணமாக முடியாமல் 49 வயதிலே மரிக்க நேர்ந்தது.

English

A charity organizer and welfare worker, she developed and led Denver's movement to consolidate its charitable organizations. She formed the Denver Federation of Social Agencies, which became the model for the national Community Chest and United Way organizations.