Jaffee v. Redmond decision
ஜாபி V . ரெட்மாண்ட் வழக்கு
தமிழ் விளக்கம்
ரிக்கி ஆலெனை என்பவர் தன்னுடைய உறவினரைக் கொலை செய்ய கத்தியுடன் நெருங்கிய சமயம், அதைப் பார்த்த மேரி லூ ரெட்மாண்ட் என்ற பெண் காவலர் ரிக்கி ஆலெனைச் சுட்டுவிட அவர் இறக்க நேரிடுகிறது. ரிக்கியின் உறவினர் ரிச்மாண்ட் மீது அத்துமீறி சுட்டதாகப் புகார் செய்து வழக்கு தொடுக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரெட்மாண்ட், கரீன் பேயர் (Karen Beyer) என்ற பிணிசார்ந்த சமூகப்பணியாளரிடம் (clinical social worker) உளப்பிணி சிகிச்சைக்குச் செல்கிறார். வழக்கு விசாரணையின் போது, கரீன் பேயர் அளித்த சிகிச்சையின் தன்மை பற்றிய விவரங்களை அரசு வழக்கறிஞர் கேட்க, தொழில் ரகசியப்ப் பிரமானத்திற்கு உட்பட்ட அந்த விவரங்களைத் தர பேயர் மறுத்துவிடுகிறார். இந்த மறுப்பைக் காரணம் காட்டி, ரெட்மாண்டும், பேயரும் உண்மைகளை மறைக்க முயல்வதாகக் கூறி, ரிக்கி ஆலெண் குடும்பத்தாருக்கு $ 545,000 இழப்பீடு வழங்க மாகாண நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, சமூகப்பணியாளருக்கும் அவரது வாடிக்கையாளருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களையோ, சிகிச்சையின் தன்மையைப் பற்றியோ தகவல் தெரிவிக்குமாறு யாரும் சமூகப்பணியாளரை நிர்பந்த்திக்க முடியாது என்ற அமெரிக்க உச்சநீதிமன்றம், கீழ்நீதிமன்றத் தீர்ப்பை தள்ளுபடி செய்கிறது. சமூகப்பணியாளர் மற்றும் அவருடைய வாடிக்கையாளரின் தொடர்புகள் தொழில்முறை இரகசியக் காப்பிற்கு உட்பட்டவை அதை யாரும் நிர்ப்பந்தம் செய்து பெற இயலாது என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
English
The 1996 U.S. Supreme Court decision that federal courts must recognize the absoluteness of social workers' right to privileged commu- nication; social workers could no longer be compelled to disclose confidential information in civil lawsuits filed in federal court. This ruling may not extend to certain actions in state courts (many of which do not provide absolute confidentiality for social workers or other mental health professionals). See also Tarasoff decision and confidentiality.