jargon

குழுமொழி, வாசகங்கள், பிதற்றொலி, பிதற்றல், வெற்று வழக்கு, சாரமில்லாத சொல்லாட்சிகள், குறிப்பிட்ட துறைக்குரிய சொற்கள் (நுட்பச் சொல்)

தமிழ் விளக்கம்

ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழியில் இருந்து மாறுபட்ட மொழி, விளங்கா மொழி, விளங்காத தொடர்கள் நிரம்பிய மொழிநடை, புரியாத பேச்சு, தெளிவற்ற சொல், குறுமொழி.
பல்வேறு சிறப்புத்தொழிலினர் (professional) பயன்படுத்தும், தங்களின் துறை சார்ந்த, தொழில்சார்ந்த, உள்விரிவாக்கம் கொண்ட சொற்றொடர்கள். இந்தச் சொற்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளிலிருந்து மாறுபட்டுப் பொருள் தரும். அந்தத் துறையில் பரிச்சயமில்லாதவர்களுக்கு, இச் சொற்றொடர்களின் பொருள் புரியாதாகையால், இதைச் சாமானியர்கள் விளங்கா மொழி என்றும், பிதற்றொலி என்றும் சொல்வார்கள்.

English

The special language that is used by various professional groups as a shorthand method of communicating complicated concepts, which usually seem obscure and confusing to those outside the group. Social work jargon includes many of the terms found in this dictionary. See also "psychobabble."