jealous-type delusional disorder

பொறாமை, ஓயா சந்தேகம், அழுக்காறு, அருங்காவற் பண்பு, காப்பு விழிப்புடைமை, இழப்பஞ்சிக் காக்கிற, சிறுதவறுகளைப் பொறாத, காதலர் வகையில் ஒயாஐயறவுடைய

தமிழ் விளக்கம்

இடைவிடா இழப்பச்சம் - பொறாமையினாலோ, சந்தேகத்தின் பேரிலோ ஏற்படும் மனப்பிராந்தி. இது மனப்பிராந்தியின் ஒருவகை. தம்பதிகளில் ஒருவரோ, தனக்கு நெருக்கமானவர் ஒருவரோ தனக்கெதிராக ரகசியமாகச் சதி செய்வதாக சந்தேகித்து அவரைத் தீவிரமாகக் கண்காணிப்பதும், தனக்கு எதிராகச் செய்யும் சதிகளுக்கான ஆதாரங்களைத் திரட்ட முயல்வதும், அவரை அச்சுறுத்துவதும், தாக்க முனைவதும் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துவர். இதை ஓதெல்லோ சிண்ட்ரோம் (Othello syndrome) என்றும் ஆரோக்கியமற்ற பொறாமை (Morbid jealousy) என்றும் சொல்வர்.

English

A subtype of delusional disorder characterized by nonbizarre delusions, particularly an intense belief that one's spouse or significant other is being secretly unfaithful. The delusion often leads one to exhibiting hyper-vigilant behavior, seeking evidence, and threatening attacks.