jealousy

பொறாமை, ஓயா ஐயவுறு, அழுக்காறு, காதலர் வகையில் ஒயாஐயறவுடைய

தமிழ் விளக்கம்

பொறாமை என்பது அன்பு, பாசம், கோபம், துக்கம், ஆசை, விரக்தி, பயம், ஏமாற்றம், இரக்கம், பரிவு, காதல், காமம், எரிச்சல், சலிப்பு, மனவுளைச்சல், பெருமை, மனக்கலக்கம், தவிப்பு, அதிர்ச்சி, திகில், பீதி போன்ற மானுட உணர்வுகளில் ஒன்று. பொறாமை என்பது 'ஒரு நபர் தனக்கு இணையானவராகவோ அல்லது தனக்குப் போட்டியாளராகவோ கருதும் ஒருவரின் பாராட்டும்பாடியான நடத்தை, சாதனை அல்லது உடமை ஆகியவற்றைப் பெறமுடியாமல் போகும் போதும், மற்றும் அதைப் பெற விரும்பும் போதும் அல்லது மற்றொருவர் அதைப் பெறக்கூடாது என விரும்பும் போதும் நிகழும் ஒரு வித உணர்வு. பொறாமை என்பது ஒருவர் தான் கொண்டிராத ஒன்றை, மற்றொருவர் கொண்டிருப்பதன் விளைவாக ஏற்படும் வலி அல்லது ஏமாற்றம் ஆகும். அரிஸ்டாட்டில் பொறாமையை 'மற்றவரின் அதிர்ஷ்டத்தால் விளையும் வலி' என்று வரையறுக்கின்றார். இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆங்கிலம் பேசும் பிற கலாச்சாரங்களில், பொறாமையானது பெரும்பாலும் பச்சை நிறத்துடன் தொடர்புடையதாக உள்ளது. 'பசுமையுடன் பொறாமை'. 'பச்சை நிறக் கண்ணுடைய அரக்கர்' என்ற சொற்றொடர் பொறாமையால் தூண்டப்பட்டதாகத் தோன்றும் தனிநபரின் நடவடிக்கைளைக் குறிக்கின்றது. புத்தமதம் நான்கு தெய்வீக நிலைகளில் மூன்றாவதாக முதித்தா என்ற நிலையை வைத்துள்ளது, இது மற்றவரின் அதிர்ஷ்டத்தை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளுதல் ஆகும். இந்தப் பண்பானது பொறாமைக்கு மாற்று மருந்தாகக் கருதப்படுகின்றது மற்றும் மற்றவரின் துரதிருஷ்டத்தில் மகிழ்ச்சியடைதலுக்கு எதிராக உள்ளது.

English

A combination of uncomfortable emotions and reactions to the perceived threat of losing a possession to a perceived rival.