Jewish communal agencies

யூத சமுதாய அமைப்புகள்

தமிழ் விளக்கம்

யூத சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சேவை செய்யும் நோக்குடன் அமெரிக்காவிலும், கனடாவிலும் செயல்படும் தொண்டு நிறுவனங்கள். யூத சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைகள், இந்த நாடுகளில் மீள்குடியேறும் யூத மதத்தினருக்கான மறுவாழ்வுப் பணிகள், அவர்கள் குடியேறும் நாடுகளின் கலாச்சாரத்தைப் பின்பற்ற உதவுதல், யூத வெறுப்புணர்ச்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தல், யூத மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாடு மற்றும் அவர்களின் மனநலப் பிரச்சனைகளைக் கையாள்வது போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது. யூத சமுதாய மையங்கள் (Jewish Community Centers), யூத இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அமைப்பு (Young Men's and Young Women's Hebrew Associations (YM—YWHA), யூத மீள்குடியேறிவர்களுக்கான உதவிச் சங்கம் (Hebrew Immigrant Aid Society (HIAS)), யூத குடும்பச் சேவைகள் (Jewish Family Service), யூத தொழில் சேவை மையங்கள் (Jewish vocational service agencies), யூத மருத்துவமனைகள் (Jewish-affiliated hospitals), முதியோர்கள் மற்றும் அந்திம கால பராமரிப்பு மையங்கள் (geriatric facilities, hospice), யூதர்களைப் பற்றிய பொய்ப் பிரச்சாரத்தைக் கையாள சகோதர ஐக்கியங்கள் (Anti-Defamation League of B'nai B'rith), இதோடு இன்னும் பல நிறுவனங்களும் யூத சமுதாய அமைப்புகளில் அடங்கும்.

English

Social services agencies in U.S. and Canadian communities with significant Jewish populations that serve indigent members of the Jewish community; resettle immigrants and help them become more acculturated to American and Canadian customs; respond to international crises; fight anti-Semitism; and help Jewish people and other members of the community with social, health, and psychological problems. These agencies include Jewish Community Centers, Young Men's and Young Women's Hebrew Associations (YM—YWHA), the Hebrew Immigrant Aid Society (HIAS), Jewish Family Service, Jewish vocational service agencies, Jewish-affiliated hospitals, geriatric facilities, hospice, Anti-Defamation League of B'nai B'rith, and many other organizations. Most of these agencies are united within the Jewish Communal Service Association (ICSA).