Jewish communal services
யூத சமுதாய சேவைகள்
தமிழ் விளக்கம்
யூத சமுதாய நலக் கூட்டமைப்பின் சார்பாக தேசிய அளவிலும், வட்டார அளவிலும் செய்யப்படும் சமூக சேவைகள், மருத்துவ சேவைகள், கல்விச் சேவைகள், பல்வேறு சமுதாயங்களுடன் உறவு மேம்பட எடுக்கப்படும் செயல்களைக் குறிக்கும் சொல்லாட்சி. 5000 யூத மக்கள் வாழ்கின்ற ஒவ்வொரு அமெரிக்கக் குடியிருப்புகளிலும், யூத சமுதாய நலக் கூட்டமைப்பு செயல்படுகிறது. இந்தக் கிளை அமைப்புகள் ஒவ்வொன்றும் நிதி திரட்டி அதை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யூத சேவைகளுக்குப் பகிர்ந்தளிக்கின்றன. இந்தச் செயல்பாடுகள், திட்டமிடல் மற்றும் தலைமத்துவ பண்புகளை வளர்க்க வாய்ப்பளிக்கின்றது.
English
A program of services provided by local and national Jewish welfare federation offices, including social services, health care, education, and intergroup relations activities. Most American communities with Jewish populations of more than 5,000 have Jewish welfare federation offices that raise funds for local and overseas allocations and provide planning and leadership development.