Job Corps

வேலைக் குழுக்கள், பணிசெய் படை

தமிழ் விளக்கம்

வசதி வாய்ப்புகளற்று பின்தங்கிய இளைஞர்களுக்கு, வேலைத் திறன்கள் வளர்த்தல், உறைவிட வசதியோடு பயிற்சியளித்தல், மற்றும் வேலை வாய்ப்பளிப்பதற்காக அமெரிக்க அரசின் பொருளாதார வாய்ப்புச் சட்டம் 1964 (லின்டன் பி ஜான்சன்) வழி செய்தது. வேலையற்ற 16-24 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புப் பயிற்சியோ அல்லது இயற்கை வளப் பராமரிப்பு முகாம்களில் பணிசெய்யவோ வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அமெரிக்க அரசின் தொழிலாளர் துறையால் நிர்வகிக்கப்பட்ட இத்திட்டத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பயிற்சி அளிக்க வாய்ப்பு பெற்றனர். பொதுமக்கள் பராமரிப்புக் குழுக்கள் (Civilian Conservation Corps (CCC) மற்றும் புதிய ஒப்பந்தம் (New Deal programs) நடைமுறைக்கு வந்தபின்னர், இத்திட்டம் சில மாற்றங்களோடு தொடர்ந்தது.

English

The federal program, established as part of the Economic Opportunity Act of 1964, designed to provide residential training, employment, and work skills to disadvantaged young people. Jobless youths between ages 16 and 24 work and study at training centers or in conservation camps. The Job Corps is managed by the U.S. Department of Labor, which contracts with local public and private agencies to establish the training centers. The program was partially modeled after the Civilian Conservation Corps (CCC) and similar New Deal programs.