Johari window
ஜோஹாரி ஜன்னல் / சாளரம்
தமிழ் விளக்கம்
ஜோசப் லஃப்ட், ஹாரி இங்காம் (Joseph Luft & Harry Ingham) என்ற இரு உளவியல் ஆராய்ச்சியாளர்கள் (கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் 1955), குழுக்கள் செயல்படும் விதத்தை விளக்குவதற்காக உருவாக்கிய வரைபடமே அவர்களின் பெயர்களின் முதல் எழுத்தைக்கொண்டு ஜோஹாரி ஜன்னல் எனப் பெயரிடப்பட்டது. துவக்கத்தில் குழுக்களின் செயல்திறனை மேம்படுத்த பயன்படுத்தப்பட்ட ஜன்னல் முறை, பின்னர் சமூகச் சூழ்நிலையை, குடும்பச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளவும், மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. ஜோஹாரி ஜன்னல் என்பது ஜன்னல் வடிவத்தில் நான்கு கால்சதுரங்களைக் கொண்டது. முதல் சதுரம் நமக்கும் பிறருக்கும் தெரிந்த தகவல்களைக் கொண்டது. இரண்டாவது சதுரம் நமக்குத்தெரியாத ஆனால் பிறருக்கு தெரிந்த தகவல்களைக் கொண்டது. மூன்றாவது சதுரத்தில் நமக்குத் தெரிந்த ஆனால் பிறருக்கு தெரியாத தகவல்களைக் கொண்டது. நான்காவது சதுரம் நமக்கும் பிறருக்கும் தெரியாத தகவல்களைக் கொண்டது. ஊரக பங்கேற்பு திறனாய்வு முறைகளில் (participatory rural appraisal) ஜோஹாரி ஜன்னல் முறை பயன்படுத்தப்படுகிறது. சமூக வாழ்வைப் பற்றிய பொதுப் புரிதலுடன் ஆரம்பிக்கும் ஒரு ஆய்வாளர் (1 - இருதரப்பிற்கும் தெரிந்த), சமுதாயத்தைப் பற்றிய தகவல்களை மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு (2 - ஆய்வாளருக்கு தெரியாத ஆனால் மக்களுக்கு தெரிந்த), ஆய்வாளருக்கு தெரியும் தீர்வு முறைகளை மக்களிடம் பகிர்ந்துகொண்டு (3. ஆய்வாளருக்கு தெரிந்த ஆனால் மக்களுக்கு தெரியாத), 4. இரு தரப்பிற்கும் தெரியாதவற்றைக் கூட்டாக முயன்று தெளிய வேண்டும் என்று மக்களின் அனுபவ அறிவும். வெளிநபர்களின் நிபுணத்துவமும் இணையும் போது அது பங்கேற்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்ற கருத்து வலியுறுத்தப்படும் .
English
A strategy in counseling and psychotherapy using a model for understanding aspects of the client's behavior. The window consists of four quadrants, that is, the public self (known to self and others), the blind self (known to others but not to oneself), the private self (known to oneself but not to others), and the unknown self (unknown to self or others). The name comes from the first names of its creators Joseph Luft and Harry Ingham.