joint custody

(குழந்தைப் பராமரிப்பில்) கூட்டுப்பொருப்பு

தமிழ் விளக்கம்

விவாகரத்தான தம்பதிகள், அவர்களின் குழந்தைகளைக் கூட்டாகப் பராமரிப்பதற்கு நீதிமன்றம் கொடுக்கும் உத்தரவு. இதன்படி இரண்டு பெற்றோர்களுடன் சமமான காலம் மாறி மாறி தங்கியிருக்கவும், யாராவது ஒரு பெற்றோருடன் தங்கியிருக்கும் பட்சத்தில் குழந்தைப் பராமரிப்பை பற்றி இணைந்தோ கலந்தாலோசித்தோ முடிவெடுக்க வேண்டுமென்பதும் இதன் சாரம். இது உடல்ரீதியாக கூட்டுப் பொறுப்பேற்பதும் (joint physical custody), சட்ட ரீதியாகக் கூட்டு பொறுப்பேற்பதும் (joint legal custody) என்று இருவகைப்படும்.

English

A legal decision involving a divorcing husband and wife and the respective responsibilities each of them will have for the care of their children. Typically, both parents maintain permanent homes for the children, and the children live with each for relatively equal amounts of time. Joint custody can also refer to an arrangement whereby the child lives with one parent most of the time, although the other parent has an equal say in important decisions regarding upbringing.