Jones, Mary Harris (1830-1930)

ஜோன்ஸ், மேரி ஹாரிஸ் (1830-1930)

தமிழ் விளக்கம்

ஜோன்ஸ், மேரி ஹாரிஸ் (1830-1930) - 'அன்னை' என்றும் 'அமெரிக்காவின் ஆபத்தான பெண்மணி' என்றும் அழைக்கப்பட்ட இவர் சமூகச் செயல்பாட்டாளர் மற்றும் தொழிற்சங்கத் தலைவி. சுரங்கத் தொழிற்சாலைகளிலும், இரும்புத் தொழிற்சாலைகளிலும் இருந்த ஆபத்தான சூழ்நிலை, மனிதாபிமானமற்ற செயல்பாடுகளை எதிர்த்து தொழிலாளர்களைத் திரட்டியாவர். தொழிலாளர்களின் மனைவியரைக் கொண்டு இவர் 'வாளி மற்றும் விளக்குமாறுப் படையை' ( bucket-and-broom brigade) உருவாக்கி, பெரிய போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தார். குழந்தைத் தொழிலாளர் முறையைப் போக்கத் தீவிரமாகப் போராடினார். இவர் பெயரில் இன்றளவும் வெளிவரும் Mother Jones என்ற இதழ் முற்போக்கான, சமூக மாற்றுருவாக்கத்திற்கான கருத்துகளைத் தொடர்ந்து பரப்பி வருகிறது.

English

Community organizer, agitator, and labor union advocate, better known as Mother Jones, she led many strikes against inhumane and dangerous working conditions in the mining and steel industries and advocated for child labor laws. Her bucket-and-broom brigade organized the wives of workers to help in the strike actions.