jump bail
ஜாமீன் ஷரத்திலிருந்து தப்பித்தல், பிணை மோசடி
தமிழ் விளக்கம்
குற்றமிழைத்த ஒருவர் நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், நீதிமன்ற அதிகார எல்லையைவிட்டு வெளியேறமாட்டேன் என்று பிணைத்தொகை செலுத்தி உத்தரவாதமளித்து, பிணையின் பேரில் (ஜாமீனில்) வெளிவந்து தப்பித்துச் செல்வது. தப்பித்துச் செல்வதென்பது நாட்டை விட்டு வெளியேறுவது, வேறு அரசெல்லைக்குள் மறைந்து வாழ்வது போன்ற செயல்களை உள்ளடக்கியதாகும். அவ்வாறு செய்யும் போது பிணைத்தொகையை இழக்க நேரிடும்.
English
A slang term referring to the actions of some defendants in failing to appear for their criminal trials after depositing significant funds with the court to ensure that they will appear for their trials or will remain in the jurisdiction. If they fail to appear or leave the jurisdiction, they forfeit the deposit.