jurisprudence

சட்ட இயல், நீதி சாஸ்திரம், மனித சமுதாயச் சட்டம் பற்றிய நூல், நீதி பரிபாலனம், சட்டத்துறை மெய்விளக்க இயல், சட்டத்துறைக் கோட்பாடு, தருமநூல்

தமிழ் விளக்கம்

சட்டம் என்பது ஒரு நிறுவன அமைப்பு முறையால், அந்நிறுவன ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல்தவிர்ப்பு குறித்த தண்டனை வழங்குகிற அதிகாரத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பதே சட்டத்தின் தனித்தன்மையாகும். இது juris சட்டம் prudence அறிவு என்ற இரண்டு லத்தீன் சொற்களின் கூட்டு. சட்டவியல் என்பது சட்டங்களின் தோற்றம், அதன் தன்மை, அதன் அமைப்பு மற்றும் செயல்படுத்தும் விதங்களைப் பற்றி அறியும் அறிவியல்.

English

The philosophy and science of law in terms of its origins, nature, and structure.