Just Say No campaign
வேண்டாமென்று சொல்வோம் பிரச்சார இயக்கம்
தமிழ் விளக்கம்
'வேண்டாம் என்று சொல்வோம்' என்ற பிரச்சார இயக்கம் போதைமருந்துப் பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்டெடுக்க உதயமானது. இந்த இயக்கம், ரொனால்ட் ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த போது, அவரது துணைவியார் நான்சி ரீகனால் முன்னெடுக்கப்பட்டது. போதைத் தடுப்பிற்காக ஆரம்பிக்கப்பட்ட பிரச்சார இயக்கம் பின் 'வன்முறை வேண்டாம்', 'திருமணத்திற்கு முன் பாலுறவு வேண்டாம்' போன்ற முயற்சிகளுக்கும் விரிவாக்கி பயன்படுத்தப்பட்டது.
English
An antidrug approach, initiated during the Reagan administration, that stressed exhortations to young people to reject the use of drugs when approached by dealers. The campaign was reviled by opponents as an attempt to avoid spending money to address a serious problem.